Images
  • thailand
    (Photo: Holland America Line website)

கொரோனா கிருமிப் பரவல் அச்சத்தால் சொகுசுக் கப்பலை ஏற்க மறுக்கும் நாடுகள்; தவிக்கும் பயணிகள்

பேங்காக் துறைமுகத்தில் Westerdam சொகுசுக் கப்பல் அணைவதற்கு அனுமதி வழங்கத் தாய்லந்து மறுத்துள்ளது.

ஹாங்காங்கிலிருந்து இம்மாதம் முதல் தேதி புறப்பட்ட சொகுசுக் கப்பல் அணைவதற்கு ஏற்கெனவே ஜப்பான், பிலிப்பீன்ஸ், தைவான், தென் கொரியா, குவாம் ஆகியவை தடை விதித்திருந்தன.

சொகுசுக் கப்பலில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட பயணிகள் கடந்த 10 நாளாகத் தவித்து வருகின்றனர்.

பயணிகளிடம் கிருமித்தொற்று இல்லை என்று Holland American நிறுவனம் மறுவுறுதிப்படுத்திய பிறகும் அதன் மீதான தடை நீடிக்கிறது.

இதற்கிடையே, அமெரிக்காவில் மற்றுமொரு சொகுசுக் கப்பல், பயணம் மேற்கொள்ள ஆயத்தமாகிறது.

பயணிகளிடையே நொவல் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், 2 நாளுக்கு அதன் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா கிருமி தொற்றியதற்கான அறிகுறிகள் தென்பட்ட இரு பயணிகள், அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பிறகே கப்பல் நியூ ஜெர்சி துறைமுகத்திலிருந்து புறப்பட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சீனாவுக்கு அண்மையில் சென்றுவந்த 23 பேர், பரிசோதனைகளுக்குப் பிறகு, கப்பலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


Top