Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அடுத்த மாதம் எல்லைகளைத் திறக்கத் திட்டமிடும் தாய்லந்து

தாய்லந்து அதன் எல்லைகளை அடுத்த மாதம் முதல் தேதி திறக்கவிருப்பதாக அந்நாட்டின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

தாய்லந்து அதன் எல்லைகளை அடுத்த மாதம் முதல் தேதி திறக்கவிருப்பதாக அந்நாட்டின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையை மீட்டெக்கும் முயற்சி அதுவென்று அவர் குறிப்பிட்டார்.

தலைநகர் பேங்காக்கும் நான்கு மாநிலங்களும் வருகையாளர்களுக்கு முதல் கட்டமாகத் திறந்துவிடப்படும்.

எஞ்சிய 21 மாநிலங்கள், அடுத்த மாத நடுப்பகுதியில் திறக்கப்படும்.

தாய்லந்தில் நோய்ப்பரவல் அதிகரித்துள்ள நிலையில், எல்லைகளைத் திறப்பதற்கான திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பெரிய இடையூறாக இருந்தாலும், எல்லைகளை மீண்டும் திறப்பதற்குத் தயாராய் இருப்பதாக தாய்லந்து கூறியது.

அந்நாட்டு மக்கள்தொகையில் 18 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்