Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்தில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தைப் பாதியாகக் குறைக்கப் பரிந்துரை

தாய்லந்தில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தைப் பாதியாகக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தைப் பாதியாகக் குறைக்கப் பரிந்துரை

(படம்: AFP)

தாய்லந்தில் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலத்தைப் பாதியாகக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில சுற்றுப்பயணத் தலங்களைத் திறக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் வெளிவந்துள்ளது.

தாய்லந்தில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் காலம் தற்போது 2 வாரங்களாக உள்ளது.

அதை ஒரு வாரத்திற்குக் குறைக்க, அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.

தனிமைப்படுத்தும் காலத்தைக் குறைப்பது, பயணத்துறைக்கு மட்டுமல்லாமல், வர்த்தகப் பயணங்களை மேற்கொள்வோர், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோருக்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.

பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகள் மட்டும், 14 நாள்கள் வரை தனிமைப்படுத்தப்படலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுப்பயணிகளுக்கு, தனிமைப்படுத்தத் தேவையின்றி, சில முக்கிய நகரங்களைத் திறந்துவிடும் திட்டம் நவம்பர் மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தடுப்பூசி போட்டோர் விகிதம் குறைவாக உள்ள நிலையில், திட்டம் தாமதம் அடைந்துள்ளது.

தாய்லந்து மக்கள்தொகையில் கால்வாசியினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

- Reuters/nh 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்