Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: 18 மில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல்

தாய்லந்து அதிகாரிகள் 18 மில்லியனுக்கும் அதிகமான Methamphetamine போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தாய்லந்து: 18 மில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல்

படம்: AFP/Tang Chhin Sothy

தாய்லந்து அதிகாரிகள் 18 மில்லியனுக்கும் அதிகமான Methamphetamine போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

'Golden Triangle' என்ற தங்க முக்கோணப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

சீனா, மியன்மார், தாய்லந்து, லாவோஸ் ஆகிய நாடுகளின் எல்லைகள் சங்கமிக்கும் Golden Triangle பகுதி, தென்கிழக்காசியாவின் லாபமிக்க methamphetamine போதை மாத்திரை வர்த்தகத்தின் முக்கியத் தளமாக இருக்கிறது.

தாய்லந்துக்குள் அந்த போதைப்பொருள் வருவதைத் தடுக்கும் முயற்சிகளின் பலனாக, பெருமளவில் அது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தது 15 கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சியாங் ராய் மாநிலத்தில் அண்மைய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்