Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

AstraZeneca தடுப்புமருந்தின் ஏற்றுமதியைத் தடுக்கவில்லை : தாய்லந்து

 AstraZeneca தடுப்புமருந்தின் ஏற்றுமதியைத் தடுக்கவில்லை : தாய்லந்து

வாசிப்புநேரம் -
AstraZeneca தடுப்புமருந்தின் ஏற்றுமதியைத் தடுக்கவில்லை : தாய்லந்து

படம்: REUTERS

உள்நாட்டில் தயாரிக்கப்படும் AstraZeneca தடுப்புமருந்தின் ஏற்றுமதியைத் தான் தடுக்கவில்லை என்று தாய்லந்து தெரிவித்துள்ளது.

தாய்லந்தில் தயாரிக்கப்படும் தடுப்புமருந்துகளை அந்நாடே வைத்துக்கொள்ளவதாக தைவான் அண்மையில் குறைகூறியது.

அதற்குத் தாயலந்து மறுப்புத் தெரிவித்துள்ளது.

தைவான் 10 மில்லியன் முறைப்போடத் தேவையான AstraZeneca தடுப்புமருந்தை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த மருந்து பெரும்பாலும் தாய்லந்தில் தயாரிக்கப்படுகிறது. ஆனால் தாய்லந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்தை சொந்தத்திற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது 

என்று தைவான் அதிபர் சாய் இங் வென் (Tsai Ing-wen) சில நாள்களுக்கு முன்பு குறைகூறினார்.

தடுப்புமருந்தின் ஏற்றுமதியை நாங்கள் தடுக்கவில்லை, தயாரிப்பு அளவைப் பொறுத்துத் தான் அது விநியோகிக்கப்படும் என்று தாய்லந்து தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தைவானிலும் தாய்லந்திலும் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்