Images
  • thai vaccine
    (படம்:AP/Sakchai Lalit)

தாய்லந்தில் 300,000க்கும் மேற்பட்டோருக்கு முதல் தடுப்பூசி

தாய்லந்தின் தடுப்பூசித் திட்டத்தின்கீழ் இதுவரை 300,000க்கும் மேற்பட்டோர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தத் திட்டம், பலநாள் தாமதத்திற்குப்பிறகு நேற்றுத் தொடங்கியது.

இருப்பினும், எவ்வளவு தடுப்புமருந்துகள் தாய்லந்துக்கு விநியோகம் செய்யப்படும் என்பதில் குழப்பம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Johnson & Johnson நிறுவனத்திடமிருந்து 25 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்துகளும்; Sinovac நிறுவனத்திடமிருந்து மேலும் 8 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்துகளும் வாங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பிராயுத் சான் ஓச்சா (Prayut Chan-o-cha) கூறியுள்ளார்.

இருப்பினும், தாய்லந்துப் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சர், Pfizer நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் முறை போடக்கூடிய அளவிலும்,
Johnson & Johnson நிறுவனத்திடமிருந்து 5 மில்லியன் முறை போடக்கூடிய அளவிலும் தடுப்புமருந்துகளை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். 

Top