Images
  • thailand covid
    (படம்: AFP)

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கும் தாய்லந்து...

தாய்லந்து, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளை, தனிமைப்படுத்தத் தேவையின்றி அனுமதிக்கத் திட்டமிடுகிறது.

அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள குறைந்தது 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தாய்லந்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அவற்றுள் அடங்கும்.

முழுப் பட்டியல் குறித்து நாளை மறுநாள் முடிவெடுக்கப்படும்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து அந்தப் பட்டியல் மேலும் விரிவாக்கப்படும்.

தாய்லந்து அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது, ஒரு சிறிய படியாக இருந்தாலும் முக்கியமான ஒன்று எனப் பிரதமர் பிராயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) குறிப்பிட்டார்.

ஆண்டிறுதி விடுமுறையில் செல்லும் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பைத் தாய்லந்து அரசாங்கம் இழக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார். 

Top