Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நில், கவனி, செல் - தாய்லந்துச் சாலைகளில் வித்தியாசமான முயற்சி

சாலையில் விபத்துகளைக் குறைக்கவும் பாதசாரிகளின் பாதுகாப்பில் மேலும் அக்கறைகாட்டவும் தாய்லந்தில் வித்தியாசமான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
நில், கவனி, செல் - தாய்லந்துச் சாலைகளில் வித்தியாசமான முயற்சி

(படம்: REUTERS)

சாலையில் விபத்துகளைக் குறைக்கவும் பாதசாரிகளின் பாதுகாப்பில் மேலும் அக்கறைகாட்டவும் தாய்லந்தில் வித்தியாசமான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலையில் பாதசாரிகள் கடக்கும் பகுதியில் முப்பரிமாண ஓவியம் ஒன்றைத் தொண்டூழிய நிறுவனம் வரைந்துள்ளது.

அந்தப்படத்தில் சில பிள்ளைகள் சாலையைக் கடப்பதுபோல் வரையப்பட்டுள்ளது. அது தூரத்திலிருந்து வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் வேகத்தை குறைக்க உதவுகிறது.

பள்ளி ஒன்றுக்கு வெளியே வரையப்பட்ட அந்தப் படம் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றது.

அந்தப் படம் பிரபலமானதால் தற்போது அது சில கோவில்களுக்கும் பள்ளிகளுக்கும் வெளியே வரையப்பட்டு வருகிறது.

தாய்லந்தில் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் ஆண்டுக்கு 10,672 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 900க்கும் மேற்பட்டோர் மரணமடைவதாக ஆய்வொன்று கூறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்