Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: Future Forward கட்சித் தலைவர், நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்து இன்று முடிவு

தாய்லந்து அரசாங்க வழக்குரைஞர்கள், Future Forward கட்சித் தலைவர் தனாதொர்ன் ஜுவாங்குருன்குருவாங்கிட் (Thanathorn Juangroongruangkit_ மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

கணினிக் குற்றங்கள் தொடர்பில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கணினிக் கட்டமைப்பில் தவறான தகவல்களைச் சேர்த்ததாக அவர்கள் மீது காவல்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இராணுவ அரசாங்கத்துக்கு எதிராகக் குறைகூறும் தகவல்கள் அவை. கட்சி கடந்த ஆண்டு நடத்திய கூட்டத்தில் அவை முன்வைக்கப்பட்டன. Facebookஇல் அது நேரடியாக ஒளிபரப்பானது.

இன்றைய நீதிமன்ற விசாரணை முன்னரே திட்டமிடப்பட்டது என்றாலும், ஞாயிற்றுக்கிழமைப் பொதுத்தேர்தலில் 33 இடங்களில் Future Forward கட்சி வெற்றிபெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்த மறுநாள் அது இடம்பெறுவதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

இவ்வேளையில், அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் மே மாதம் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்