Images
  • nuclear pakistan
    (படம்: Reuters/Mian Khursheed)

பாகிஸ்தானிய அணுசக்தித் திட்டத்தின் தந்தை காலமானார்

பாகிஸ்தானிய அணுசக்தித் திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் அப்துல் கதீர் கான் (Abdul Qadeer Khan) காலமானார்.

AQ Khan என அழைக்கப்படும் அவருக்கு, வயது 85.

அணு விஞ்ஞானியான அவர், 1998-ஆம் ஆண்டில் பாகிஸ்தானை, உலகின் அணுவாற்றல் படைத்த முதல் இஸ்லாமிய நாடாக உருவாக்கியதற்குப் பெயர் பெற்றவர்.

ஆனால், ஈரான், லிப்யா, வடகொரியா போன்ற நாடுகளுக்குச் சட்டவிரோதமாக அந்தத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்ததற்காக, அவர் குறை கூறப்பட்டுவந்தார்.

உலக வரலாற்றில், AQ Khan அளவுக்கு அணுவாயுதங்களைப் பரப்பியவர் வேறு எவரும் இல்லை என்று, அவரது எதிர்ப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.  

Top