Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

40 நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி - பிலிப்பீன்ஸ்

பிலிப்பீன்ஸ் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்குத் தனிமைப்படுத்துவதற்கான விதிமுறையை அகற்றியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
40 நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு அனுமதி - பிலிப்பீன்ஸ்

(படம்: REUTERS/Lisa Marie David)

பிலிப்பீன்ஸ் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்குத் தனிமைப்படுத்துவதற்கான விதிமுறையை அகற்றியிருக்கிறது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் சீனாவும் அடங்கும்.

தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள், நாளை முதல் (அக்டோபர் 16) இம்மாத இறுதிவரை நடப்பில் இருக்கும்.

பிலிப்பீன்ஸுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகப் பயணிகள், PCR பரிசோதனை செய்து, தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.

அத்துடன், பிலிப்பீன்ஸுக்குப் பயணம் மேற்கொள்வோர், நோய்க்கான அறிகுறிகளை இரண்டு வாரங்களுக்குக் கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நோய்ப்பரவல் தொடங்கியது முதல், பிலிப்பீன்ஸ் வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்