Images
  • Tiger
    (படம்: AFP)

இந்தியா: துணையையும் உணவையும் தேடி நடந்துகொண்டே இருக்கும் புலி


இந்தியாவில் புலி ஒன்று கடந்த ஐந்து மாதங்களில் 1,300 கிலோமீட்டர் நடந்துள்ளது.

இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள ஆக நெடுந்தூர நடை அது என்று BBC தெரிவித்துள்ளது.

இரண்டரை வயதாகும் அந்த ஆண் புலி, வேட்டையாடுவதற்கு விலங்குகளை அல்லது சேர்ந்து வாழ்வதற்குத் துணையை அல்லது தங்குவதற்குத் இருப்பிடத்தைத் தேடி அலைவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

மகாராஷ்டிராவிலுள்ள வன விலங்குக் காப்பகத்திலிருந்து ஜூன் மாதம் அனுப்பப்பட்டது புலி.

தனக்கு ஏற்ற இயற்கையான இருப்பிடத்தைப் புலி தேர்ந்தெடுத்துக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அதனைக் கண்காணிக்க புலியின் கழுத்தில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

பண்ணைகள், நீர்வழிகள், விரைவுச்சாலைகள் அனைத்திலும் சுற்றித் திரிந்துள்ளது புலி.

ஒருமுறை மட்டும் அது தவறுதலாக ஒருவரைக் காயப்படுத்தியதாக BBC தெரிவித்துள்ளது.

மகாராஷ்ட்ராவிலிருந்து தெலங்கானாவை அடைந்த புலி மகாராஷ்டிராவிலுள்ள வேறொரு வனவிலங்குக் காப்பகத்தில் இப்போது உள்ளது.  

Top