Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் பிரச்சாரக் காணொளிகளை அகற்றும் TikTok

ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் பிரச்சாரக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்த கணக்குகளை TikTok செயலி அகற்றியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் பிரச்சாரக் காணொளிகளை அகற்றும் TikTok

படம்: AFP/JOEL SAGET

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் பிரச்சாரக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்த கணக்குகளை TikTok செயலி அகற்றியுள்ளது.

இதுவரை சுமார் 10 கணக்குகள் அத்தகைய காணொளிகளைப் பதிவேற்றம் செய்ததற்காக நீக்கப்பட்டுள்ளதாக TikTok நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Beijing Bytedance என்னும் சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள TikTok செயலியைச் சுமார் 500 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சடலங்கள் சாலையில் கொண்டு செல்லப்படும் காட்சிகளும், ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கும் காட்சிகளும் காணொளிகளில் இடம்பெற்றுள்ளதாக Wall Street Journal தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்