Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க சொந்த ஹெலிகாப்டரை உருவாக்கும் இந்தோனேசிய ஆடவர்

இந்தோனேசியா, போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போன நாடு. அன்றாடம் பயணிகள் நெரிசலில் மாட்டிக்கொள்வது வழக்கம். 

வாசிப்புநேரம் -
போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க சொந்த ஹெலிகாப்டரை உருவாக்கும் இந்தோனேசிய ஆடவர்

(படம்: AFP/Wulung WIDARBA)


இந்தோனேசியா, போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் போன நாடு. அன்றாடம் பயணிகள் நெரிசலில் மாட்டிக்கொள்வது வழக்கம். அதிலிருந்து தப்பிக்க புது முயற்சியில் இறங்கியுள்ளார் ஜுஜுன் ஜுனேடி. அந்த இந்தோனேசிய ஆடவர் சொந்தமாக ஹெலிகாப்டரை உருவாக்கி வருகிறார்.

ஓய்வு நேரத்தில் ஹெலிகாப்டரை உருவாக்கும் வழிகாட்டிக் காணொளிகளைப் பார்த்து, அதனைச் செய்யக் கற்றுக்கொண்டுள்ளார்.

அவரின் சொந்த ஊர் சுகாபூமி. அதன் மேலே ஹெலிகாப்டரில் பறந்து செல்வது அவரது கனவு.

ஹெலிகாப்டருக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்கியதோடு, தமது வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்திலிருந்து பழைய பொருட்களையும் பயன்படுத்தினார்.

இதுவரை ஹெலிகாப்டரை உருவாக்க சுமார் 2,100 டாலர் செலவு செய்துள்ளார். 18 மாதங்களுக்கு முன்னர் அதனை உருவாக்கும் பணி தொடங்கியது.

ஹெலிகாப்டர் வெற்றிகரமாகப் புறப்படும்போது தான், முழுமையான திருப்தியை அடைய முடியும் என்றார் ஜுனேடி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்