Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியப் பொதுத் தேர்தல் : தமிழ்நாட்டில் மோதும் கட்சிகள்

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது.  

வாசிப்புநேரம் -
இந்தியப் பொதுத் தேர்தல் : தமிழ்நாட்டில் மோதும் கட்சிகள்

( படம்: Facebook /DMK )

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது.

புதுச்சேரியையும் சேர்த்து தமிழகத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 40.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை நேற்று ரத்து செய்தது. சட்டவிரோத நடவடிக்கைகள் அதற்குக் காரணம் என்று ஆணையம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் போட்டியிடும் முக்கியக் கட்சிகள்:

தமிழகத்தை ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம், புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

-- அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தமிழகத்தின் முக்கிய எதிர்த்தரப்பான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது.

--நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் 38 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.

--அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் எல்லாத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

பல கட்சிகள் சம பலத்துடன் மோதுவதால் யாருக்கு வெற்றி என்பது பெரும் கேள்வியாக உள்ளது. வாக்குகள் பிரிந்துவிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்