Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மும்பையில் வாய்க்காலில் விழுந்த குழந்தையைத் தேடும் பணி மும்முரம்

மும்பையிலுள்ள ஒரு மூடப்படாத வாய்க்காலில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மும்பையில் வாய்க்காலில் விழுந்த குழந்தையைத் தேடும் பணி மும்முரம்

(படம்: AFP)

மும்பையிலுள்ள ஒரு மூடப்படாத வாய்க்காலில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள், ஏணிகள், கயிறு, மாபெரும் ஒளிவிளக்குகளைப் பயன்படுத்திக் குழந்தையைத் தேடிவருகின்றனர்.

நேற்று முன்தினம் (ஜூலை 10) இரவு, அந்தக் குழந்தை வீட்டிலிருந்து காணாமற்போனதும் பதறிப் போயினர் குடும்பத்தார்.

காவல்துறைக்குப் புகார் கொடுத்ததும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் குழந்தையைத் தேடத் தொடங்கினர்.

குழந்தை குடியிருந்த சேரிப் பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்புக் கேமராவில், மழைநீர் வாய்க்காலுக்குள் குழந்தை தவறி விழுவது பதிவாகி இருந்தது.

யாரோ சிலர், அந்த வாய்க்காலின் மூடியைத் திறந்து வைத்துள்ளனர்.

வேகமாக ஓடிய மழைநீரில் குழந்தை அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடுமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

குழந்தையைக் கண்டுபிடித்துத் தராமற்போனால், சாலைகளை மறித்துப் போக்குவரத்தை முடக்கப் போவதாகக் குடியிருப்பாளர்கள் மிரட்டி வருகின்றனர்.

சாலைகளையும் வாய்க்கால்களையும் அதிகாரிகள் முறையாகப் பராமரிக்காத காரணத்தாலேயே, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதாக அவர்கள் குறைகூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்