Images
  • japan (1)
    கோப்புப் படம்: Reuters

ஜப்பான்: நோய்த்தொற்று மோசமடைந்தால் தோக்கியோவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படலாம்

ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்படக்கூடும் என்று அந்நகரின் ஆளுநர் யூரிக்கோ கொய்க்கே (Yuriko Koike) எச்சரித்துள்ளார்.

அங்கு ஒரே நாளில் 460க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டத்தைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

நெருக்கடி நிலையைத் தவிர்க்க பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு ஆளுநர் கொய்க்கே கேட்டுக்கொண்டார்.

நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களில் 70 விழுக்காட்டினரை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று ஜப்பானியப் பொருளியல் அமைச்சர் கூறினார்.

கடந்த வாரம் தோக்கியோவில் பதிவாகிய கிருமித்தொற்றுச் சம்பவங்களால் இரண்டாம் கட்டப் பரவல் ஏற்படக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.
 

Top