Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர் நட்டமா?

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர் நட்டமா?

படம்: AFP / Charly Triballeau

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் 2 பில்லியன் டாலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை Yomiuri நாளிதழ் இன்று வெளியிட்டது.

COVID-19 நோய்த்தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவியதால் கடந்த மார்ச் மாதம் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

போட்டிகளை அடுத்த ஆண்டு நடத்த அனைத்துலக ஒலிம்பிக் மன்றமும் ஜப்பானிய அரசாங்கமும் முடிவெடுத்தன.

ஒலிம்பிக் போட்டிகளுக்காகச் சுமார் 13 பில்லியன் டாலர் செலவிடப்பட்டதாக Yomiuri நாளிதழ் குறிப்பிட்டது.

இருப்பினும் அந்தத் தகவல் குறித்து ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துரைக்கவில்லை.

போட்டிக்கான செலவு, நட்டம் உள்ளிட்ட விவரங்களை ஏற்பாட்டுக் குழுவினர் அடுத்த மாதம் அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் 3 பில்லியன் டாலர் நட்டம் ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டது.

ஆனால் ஏற்பாட்டாளர்களின் விரைவான நடவடிக்கையால் பெரிய அளவிலான நட்டத்தைத் தவிர்க்க முடிந்ததாக நாளிதழ் குறிப்பிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்