Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தோக்கியோவில் நெருக்கடி நிலைக்கு இடையே நூற்றுக்கணக்கான ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் பங்கெடுத்த திடல்,தட நிகழ்ச்சி

அவர்கள் காலை, மாலை என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
தோக்கியோவில் நெருக்கடி நிலைக்கு இடையே நூற்றுக்கணக்கான ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் பங்கெடுத்த திடல்,தட நிகழ்ச்சி

(படம்: REUTERS/Issei Kato)


ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நூற்றுக்கணக்கான ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் திடல், தடச் சோதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

தோக்கியோவில் நெருக்கடிநிலை தொடர்ந்து நடப்பில் உள்ளதால் சோதனை நடைபெற்ற தேசிய அரங்கத்திற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இன்றைய நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட விளையாட்டாளர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் காலை, மாலை என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சுமார் 3 மாதங்கள் உள்ளன.

அதனால், ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கைகளைத் திறம்பட மாற்றியமைப்பதுடன் கிருமித்தொற்றுக்கு எதிரான சோதனைகளையும் செய்து பார்க்கின்றனர்.

சென்ற மாதத்திலிருந்து 11 போட்டிகள் நடத்தப்பட்டன.

கிருமித்தொற்றுச் சூழல் காரணமாக ஜப்பானிய மக்களில் பெரும்பாலோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க அல்லது ரத்துசெய்ய விரும்புவதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேசிய அரங்கத்திற்கு வெளியே போட்டிகளுக்கு எதிரான பேரணி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்