Images
  • Tokyo stadium
    படம்:  AFP/CHARLY TRIBALLEAU

வெப்பத்தைத் தணிக்கும் தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்கான விளையாட்டரங்கம் 1.4 பில்லியன் டாலர் செலவில் எழுப்பப்பட்டுள்ளது.

வெப்பத்தைத் தணிக்கும் வகையில்  அரங்கத்தின் வடிவமைப்பு அமைந்துள்ளது. அந்த வடிவமைப்பு இயற்கையை அடிப்படையாகக் கொண்டது.

ஜப்பானின் கோடைக்கால வெப்பம் தோக்கியோ 2020 ஒலிம்பிக் ஏற்பட்டாளர்களுக்குப் பெரும் அக்கறைக்குரிய அம்சமாக உள்ளது.

அதன் காரணமாக கடுமையான மருத்துவ நெருக்கடிகளை விளையாட்டுப் போட்டிகள் எதிர்நோக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

விளையாட்டரங்கம் 5 மாடிகள் கொண்டது. கென்கோ குமா என்னும் புகழ்பெற்ற ஜப்பானிய கட்டடக் கலைஞரின் கைவண்ணத்தில் அரங்கம் எழுப்பப்பட்டுள்ளது. 60,000 பேர் அரங்கத்தில் அமரலாம். ஜப்பானில் உள்ள 47 மாநிலங்களிலிருந்து சீடார் மரம் தருவிக்கப்பட்டு அரங்கம் கட்டப்பட்டது.


Top