Images
  • AirAsia CEO
    ஏர் ஏஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ்.படம்: REUTERS/Soe Zeya Tun

Facebook கணக்கை மூடினார் ஏர் ஏஷியா தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஏர் ஏஷியா விமான நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. டோனி பெர்னாண்டஸ், தமது Facebook கணக்கை மூடிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வெறுப்பு தமக்கு வெறுப்பைத் தருவதாக அவர் கூறினார்.

சமூக ஊடகங்களால் விளையும் நன்மையைக் காட்டிலும் சில சமயங்களில் அவற்றின் மூலம் பரவும் வெறுப்பு அதிகமாய் இருப்பதாக Twitterஇல் அவர் பதிவிட்டுள்ளார்.

Twitter கணக்கையும் தாம் விரைவில் மூடக்கூடுமென திரு. ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டுள்ளார்.

அவரது Facebook பக்கத்தை 670,000 பேர் பின்தொடர்கின்றனர்.

நியூசிலந்து பயங்கரவாதத் தாக்குதல், Facebookஇல் நேரடியாக ஒளிபரப்பான பிறகு, இனியும் அதில் இருக்கவேண்டுமா என யோசித்து வருவதாக, நேற்று அவர் Twitterஇல் குறிப்பிட்டிருந்தார்.

Twitterஇல் அவரை 1.29 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.


Top