Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர்: சுங்கச் சாவடிகளில் "Touch n Go" அட்டையில் பணம் நிரப்புவோருக்குக் கூடுதல் கட்டணம்

ஜொகூர் மாநில அரசாங்கம் சுங்கச் சாவடிகளில் "Touch n Go" அட்டையில் பணம் நிரப்புவோருக்கு   கூடுதலாக 10 வெள்ளி கட்டணம் விதிப்பது குறித்து  ஆலோசித்து வருகிறது. 

வாசிப்புநேரம் -

ஜொகூர் மாநில அரசாங்கம் சுங்கச் சாவடிகளில் "Touch n Go" அட்டையில் பணம் நிரப்புவோருக்கு கூடுதலாக 10 வெள்ளி கட்டணம் விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

சுங்க, குடிநுழைவு,தொற்றுநோய்த் தடுப்பு நிலையம், பன்குனான் சுல்தான் இஸ்கண்டார் (Bangunan Sultan Iskandar), சுல்தான் அபு பகார் வளாகம் (Sultan Abu Bakar Complex) முதலியவற்றில் பணம் நிரப்புவோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

"Touch n Go" அட்டையில் பணம் நிரப்புவோர் தங்களின் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று மாநிலப் பணி, நகர்ப் புற வட்டார மேம்பாட்டுத் தலைவர் ஹஸ்னி முகமது (Hasni Mohammad) கூறினார்.

சிங்கப்பூர் ஜொகூருக்கு இடையிலான போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான ஒரு தீர்வாக அது அமையும் என்று அவர் கூறினார்.

பணம் நிரப்ப விரும்பாதவர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ள முகப்புகளில் பணத்தை நிரப்பிக்கொள்ளலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்