Images
  • trash selfie (1)
    (படம்: Facebook/ameer.rul.3)

குப்பைகளுடன் 'Selfie' எடுத்துக்கொள்ளும் ஆடவர்

கண்கவர் இடங்களில் "selfie" படங்கள் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்வது பல இளையர்களின் பழக்கம்.

மலேசியாவில் வாழும் 28 வயது அமீர் ரோஸ்லான் (Ameer Roslan) சற்று மாறுபட்ட விதமாகக் குப்பைகளுடன் "selfie" படங்கள் எடுத்து வருகிறார்.

குப்பைப் போடுவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அவரின் நோக்கம். பொறுப்பில்லாமல் கண்ட இடங்களில் குப்பைகளை வீசுபவர்களைத் தம் சமூக ஊடகப் பதிவுகளில் அவர் கண்டிப்பதும் உண்டு.


ஆங்காங்கே குப்பை வீசும் பழக்கத்தைத் தொடர்ந்தால் ஒவ்வொரு சுற்றுலாத் தலமும் குப்பை மேடாக மாறிவிடும் என்கிறார் அவர்.

Top