Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கூகள் வரைபடத்தைப் பார்த்து வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்குக் காத்திருந்த சோதனை

இந்தோனேசியாவில் கூகள் வரைபடத்தைப் பார்த்து வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்குச் சோதனை காத்திருந்தது.

வாசிப்புநேரம் -
கூகள் வரைபடத்தைப் பார்த்து வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்குக் காத்திருந்த சோதனை

(படம்: Reuters)

இந்தோனேசியாவில் கூகள் வரைபடத்தைப் பார்த்து வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநருக்குச் சோதனை காத்திருந்தது.

யாரையும் அணுகாமல், கூகள் வரைபடம் சொல்லும் பாதையில் தமது கனரக வாகனத்தைச் செலுத்திய 23 வயது ஆடவர் மலையுச்சியில் இருந்து வாகனத்தோடு ஆற்றுக்குள் விழுந்தார்.

சம்பவம் பாலியின் உபுட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக "The Jakarta Post" நாளேடு குறிப்பிட்டது.

ஓட்டுநர், கிழக்கு ஜாவா பகுதியிலிருந்து வாகனத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு பாலிக்குச் சென்று கொண்டிருந்தார்.

தமது பயணத்தின் போது தெரியாத பாதையில் வண்டியைச் செலுத்த நேரிட்ட போது அவ்வழியே சென்ற மக்களை அணுகாமல், கூகள் வரைபடம் சொல்லும் பாதையில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார் ஓட்டுநர்.

அவர் சென்ற பாதை இரு சக்கர வாகனங்களுக்கும், சிறிய ரக வாகனங்களுக்கும் ஏற்ற பாதை.

வழி குறுகலாக இருந்தாலும் ஓட்டுநர் சாமர்த்தியமாக வண்டியை மறுமுனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

மறுமுனைக்குச் சென்ற போதும் வாகனம் நிலைதடுமாறி மலையிலிருந்து ஆற்றுக்குள் விழுந்தது.

ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

காயங்களுக்குச் சிகிச்சை பெற்ற பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக "The Jakarta Post" நாளேடு குறிப்பிட்டது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்