Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெறும்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெறும்

(படம்: REUTERS/Jonathan Ernst)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான உச்சநிலைச் சந்திப்பு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வடகொரியத் தலைவரின் முக்கிய உதவியாளர் கிம் யோங் சோல் (Kim Yong Chol), நேற்று அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு அந்த அறிவிப்பு வெளியானது.

இருப்பினும், பியோங்யாங் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்பதன் தொடர்பில் இரு தரப்புக் கருத்து வேற்றுமைக்குத் தீர்வுகாணப்படவில்லை.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் நடந்த முதல் உச்சநிலைச் சந்திப்பில் கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக மாற்றுவதற்கு, வடகொரியத் தலைவர் தெளிவற்ற முறையில் கடப்பாடு தெரிவித்திருந்தார்.

ஆனால் அதற்கான உறுதியான படிகளை அவர் இன்னும் எடுத்துவைக்கவில்லை என்று வாஷிங்டன் கூறுகிறது.
  
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்