Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மறைந்த பின்னணிப் பாடகர் திரு. S P பாலசுப்ரமணியத்தின் நினைவாக மணற்சிற்பம்

இந்தியாவில், மறைந்த பிரபலப் பின்னணிப் பாடகர் திரு. S P பாலசுப்ரமணியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

வாசிப்புநேரம் -
மறைந்த பின்னணிப் பாடகர் திரு. S P பாலசுப்ரமணியத்தின் நினைவாக மணற்சிற்பம்

(படம்: Twitter/Sudarsan Pattnaik)

இந்தியாவில், மறைந்த பிரபலப் பின்னணிப் பாடகர் திரு. S P பாலசுப்ரமணியத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

அவர் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் அந்தச் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

"Tribute to legendary singer SP. Balasubramanyam" எனும் வார்த்தைகளுடன் திரு. பாலசுப்ரமணியத்தின் உருவத்தைத் திரு. பட்நாயக் சித்திரித்துள்ளார்.

மாபெரும் பாடகரான திரு. பாலசுப்ரமணியத்தின் மறைவைக் கேட்டு நான் கவலையடைந்தேன். அவருடைய பாடல்கள் வழி, அவர் தொடர்ந்து அனைவரின் மனங்களிலும் வாழ்வார். 

என்று அவர் தமது Twitter பக்கத்தில் பதிவிட்டார்.

திரு. பாலசுப்ரமணியம், உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25) காலமானார்.

அவருக்கு வயது 74. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்