Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இரண்டு நிமிடங்களுக்குத் தொலைபேசியைப் பயன்படுத்த வரிசையில் நிற்கும் காஷ்மீர் மக்கள்

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கிடையே, மக்கள் விலைமதிப்பில்லா ஒன்றுக்கு அன்றாடம் வரிசையில் நிற்கின்றனர்.

வாசிப்புநேரம் -
இரண்டு நிமிடங்களுக்குத் தொலைபேசியைப் பயன்படுத்த வரிசையில் நிற்கும் காஷ்மீர் மக்கள்

படம்: AFP/TAUSEEF MUSTAFA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஸ்ரீநகர்: இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கிடையே, மக்கள் விலைமதிப்பில்லா ஒன்றுக்கு அன்றாடம் வரிசையில் நிற்கின்றனர்.

இரண்டு நிமிடம் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கிடைப்பது அங்குள்ள மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதம்.

வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள அதுவே அவர்களுக்குப் பொன்னான தருணம்.

ஸ்ரீநகர், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு, ஒருவாரமாக தொலைபேசி, இணையத் தொடர்பு இல்லை.

ஆகவே, காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஏக்கத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டுள்ளனர்.

அங்குள்ள 2 தொலைபேசிகளில் இருந்து அவர்கள், வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் உள்ள உற்றார் உறவினருக்கு 2 நிமிடங்கள் பேசலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்