Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 2 பதின்ம வயதினர்; ஒருவர் தற்கொலை

இந்தியாவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 2 பதின்ம வயதுப் பெண்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 2 பதின்ம வயதினர்; ஒருவர் தற்கொலை

(படம்: AFP/ Sajjad Hussain)

இந்தியாவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 2 பதின்ம வயதுப் பெண்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதனால், சென்ற மாதம் இந்தியாவில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராகக் கடுமையான சட்டம் நடப்புக்கு வந்து என்ன பயன் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதிய சட்டத்தின் கீழ், 12 வயதிற்குக் குறைந்த பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் நிரூபணமானால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

மேலும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்குக் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

அண்மைய இரண்டு சம்பவங்களின் தொடர்பில் கைது நடவடிக்கை ஏதும் இடம்பெறவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

முதல் சம்பவத்தில், 16 வயதுப் பெண் 8 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அப்பெண் தற்கொலைச் செய்து கொண்டார்.

மற்றொரு சம்பவத்தில், 19 வயதுப் பெண்ணை 5 ஆடவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

5 ஆடவர்களில் ஒருவர், ரிக்-ஷா ஓட்டுநர்.

பேருந்தைத் தவற விட்டு விட்டதாக அந்தப் பெண்ணை நம்பவைத்து மற்றொரு பேருந்து முனையத்துக்கு அழைத்துச் செல்வதாக அவர் பொய் சொல்லியிருக்கிறார்.

தனது ரிக்-ஷாவில் ஆள் நடமிட்டமில்லா இடத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று, மேலும் நால்வருடன் சேர்ந்து அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்