Images
  • typhoon japan
    (படம்: Kyodo News via AP)

ஃபாசாய் சூறாவளியால் ஆட்டங்கண்டது தோக்கியோ

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் ஃபாசாய் (Faxai) சூறாவளியால் குறைந்தது 2 பேர் மாண்டனர். பலர் காயமடைந்தனர்.

மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி நகர்ந்துகொண்டிருக்கிறது.

அந்தக் கடுமையான சூறாவளியால் 700,000க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டன.

சூறாவளியால் மின்சார விநியோகக் கட்டமைப்புகள் சேதமடைந்தன.

ஆகையால் தோக்கியோவின் சில பகுதிகளில் மின்சார வசதிகள் உடனடியாக வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான சாத்தியம் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்துச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 160 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகளும் தடைப்பட்டன.

Top