Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்வு

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்வு

வாசிப்புநேரம் -

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் முகக்கவசம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

Expo 2020 அனைத்துலகக் கண்காட்சி அடுத்த மாதம் அங்கு நடக்கவிருக்கும் நேரத்தில் புதிய அறிவிப்பை ஐக்கிய அரபுச் சிற்றரசு வெளியிட்டுள்ளது.

தற்போது அங்கு COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களும் குறையத்தொடங்கியுள்ளன.

பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவது இதற்குமுன் கட்டாயம்.

இனி பொது இடங்களில் உடற்பயிற்சி செய்யும் போதும், கடற்கரை, முடிதிருத்தும் இடங்களிலும் இரண்டு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தால் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

எங்கெங்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்புப் பலகைகளும் பொது இடங்களில் வைக்கப்படவுள்ளன.

அக்டோபர் முதல் தேதி தொடங்கவுள்ள Expo 2020 கண்காட்சி 25 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்