Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்: அம்னோ கட்சி

மலேசியாவில் நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்: அம்னோ கட்சி

வாசிப்புநேரம் -
மலேசியாவில் நோய்ப்பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்: அம்னோ கட்சி

(படம்: Bernama)

மலேசிய அமைச்சரவையில் தனது அமைச்சர்கள் தொடர்ந்து பொறுப்பில் இருப்பார்கள் என்று அம்னோ கட்சி தெரிவித்துள்ளது.

அதே நேரம், COVID-19 நோய்ப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அது கூறியுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என ஊகம் நிலவும் நேரத்தில், அம்னோ அவ்வாறு கூறியது.

அந்தக் கட்சி அதன் இரண்டாவது உச்ச- மன்றக் கூட்டத்தை இந்த வாரம் நடத்தியது.

அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர் அகமது ஸாஹித் ஹமீடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அம்னோ கட்சியைப் பிரதிநிதிக்கும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் அரசாங்கத்தில் தொடர்ந்து சேவையாற்றுவார்கள் என்றார் அவர்.

மக்களின் நலனைப் பாதுகாப்பதுடன், கட்சியின் கண்ணியத்தைத் தற்காத்துக்கொள்ளவும் அவர்கள் கடப்பாடு கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்