Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை: அம்னோ தலைமைச் செயலாளர்

மலேசியாவின் அம்னோ கட்சி, Perikatan Nasional அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்துவருவதாக, கட்சியின் தலைமைச் செயலாளர் அகமது Maslan தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
மலேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை: அம்னோ தலைமைச் செயலாளர்

(படம்: Bernama)

மலேசியாவின் அம்னோ கட்சி, Perikatan Nasional அரசாங்கத்தில் இருந்து விலகுவது குறித்து பரிசீலனை செய்துவருவதாக, கட்சியின் தலைமைச் செயலாளர் அகமது Maslan தெரிவித்துள்ளார்.

அரசியல் ஒத்துழைப்பை ஆளும் கூட்டணி அரசாங்கம் தொடர விரும்பினால், அதற்குரிய எழுத்துபூர்வ ஒப்பந்தத்துக்குப் புதிய நிபந்தனைகளை அம்னோ முன்வைக்கும் என்றார் அவர்.

அந்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது குறித்து கட்சி முடிவெடுக்கும் என்று அவர் கூறினார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மையும், பொருளியல் வளர்ச்சியும் முக்கியம் என்று அம்னோ கருதுவதாகத் திரு அகமது சொன்னார்.

மலேசியாவின் ஆளும் கட்சியாக அம்னோ முன்பு திகழ்ந்தது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அது தோல்வி கண்டு ஆட்சி இழந்தது.

மார்ச் மாதம் பிரதமர் Muhyiddin Yassin-னின் Bersatu கட்சியுடன் சேர்ந்த அம்னோ, மீண்டும் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்