Images
  • Rakhine crisis
    படம்: Reuters/Jorge Silva

மியன்மார்: ரக்கைன் மாநில உதவிக்கு அனுமதியளிக்குமாறு ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரி கோரிக்கை

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திற்கு உதவி வழங்க தொண்டூழியர்களுக்கு அனுமதி அளிக்குமாறு ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் உர்சுலா மியுல்லர் (Ursula Mueller) அந்த வேண்டுகோளை விடுத்தார்.

அரசாங்கத் தரப்பினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டையில் சுமார் 33,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். போதுமான உதவி இல்லாததால் உயிரிழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

சண்டையில் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய அனுமதி வழங்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவன அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

நடமாடும் மருத்துவமனைகள் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லையெனில் அவர்கள் உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

Top