Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாருக்கான ஐக்கிய நாட்டு நிறுவனச் சிறப்புத் தூதராக சிங்கப்பூரர் நோலீன் ஹேசர் நியமனம்

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மியன்மார் சிறப்புத் தூதராக சிங்கப்பூர் சமூகவியலாளர் நோலீன் ஹேசர் (Noeleen Heyzer) நியமிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
மியன்மாருக்கான ஐக்கிய நாட்டு நிறுவனச் சிறப்புத் தூதராக சிங்கப்பூரர் நோலீன் ஹேசர் நியமனம்

(படம்: Noeleen Heyzer)

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மியன்மார் சிறப்புத் தூதராக சிங்கப்பூர் சமூகவியலாளர் நோலீன் ஹேசர் (Noeleen Heyzer) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) அதனை அறிவித்தார்.

சுவிட்சர்லந்தைச் சேர்ந்த கிறிஸ்டின் ஷ்ரானர் பர்கனருக்குப் (Christine Schraner Burgener) பதிலாக அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

திருவாட்டி ஹேசர், ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் பல உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்.

மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றின் தொடர்பில் ஆசியானுடனும், மியன்மாருடனும் அவர் அணுக்கமாகப் பணியாற்றியுள்ளார்.

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, இதுவரை நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் எவரும் அங்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

 - AGENCIES/nh

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்