Images
  • un chief Antonio Guterres
    (கோப்புப் படம்: Michael Sohn/Pool via REUTERS) 

மியான்மார் ராணுவம் 'அடக்குமுறையை நிறுத்த வேண்டும்': ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ்

மியன்மார் ராணுவம், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதத் தொடக்கத்தில், மியன்மார் ராணுவம் அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மியன்மார் மக்கள் பெரும்பாலோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோரை விடுவிக்குமாறும் திரு. குட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.

ஜெனீவா மனித உரிமை மன்றத்தில் பேசிய அவர்,
மியன்மாரில், ஜனநாயகத்திற்கு எதிரான செயல்கள் நடத்தப்படுவதாகச் சாடினார்.

வன்முறைக்கு முடிவுகட்டி, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு மியன்மார் ராணுவத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.

அண்மைய தேர்தல் முடிவின் மூலம் மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதிபலித்துள்ளனர். அவற்றுக்கு மதிப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தினார். 

Top