Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது'

மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷல் பெஷ்லெட் (Michelle Bachelet) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது'

(படம்: CNA)

மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷல் பெஷ்லெட் (Michelle Bachelet) கூறியுள்ளார்.

நிலைமை மோசமடைவதற்குள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

வன்முறை, பொருளியல் சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளை மியன்மார் எதிர்நோக்குகிறது.

குடியிருப்பு வட்டாரங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், பள்ளிகள் போன்றவற்றைக் குறிவைத்து நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனத் திருவாட்டி பெஷ்லெட் கேட்டுக்கொண்டார்.

அத்தகைய பிரச்சினைகளால், மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்