Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: நிலையற்ற பொருளியல் சூழலால் திருவிழாக் காலக் கொண்டாட்டம் பாதிக்கப்படலாம்

இந்தியாவின் பொருளியல் நிலையற்ற சூழலில் இருப்பதால் திருவிழாக் காலக் கொண்டாட்டம் பாதிக்கப்படலாம் என்று  கவலை எழுந்துள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியா: நிலையற்ற பொருளியல் சூழலால் திருவிழாக் காலக் கொண்டாட்டம் பாதிக்கப்படலாம்

படம்: Pixabay

இந்தியாவின் பொருளியல் நிலையற்ற சூழலில் இருப்பதால் திருவிழாக் காலக் கொண்டாட்டம் பாதிக்கப்படலாம் என்று  கவலை எழுந்துள்ளது.

இம்மாத இறுதி வரை, இந்து சமயத் திருவிழாக்கள் பல  கொண்டாடப்படவுள்ள நிலையில், வர்த்தகர்களுக்கு இது சவாலான காலமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் பலரும் தீபாவளியை முக்கியமான திருவிழாவாகக் கருதுகின்றனர்.

வீட்டு அலங்காரப் பொருட்களை வாங்குவதற்கு அதிகம் செலவழிப்பர்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டின், இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி விகிதம் 5 விழுக்காடு குறைந்தது.

பொருளியல் மந்தமடைவதால், வாடிக்கையாளர்கள் செலவிடுவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று  கூறப்படுகிறது.

இணையத்தள விற்பனையாளர்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

சிறார் காலணிகள்,  அணிகலன்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து அமேசான் போன்ற மின் வணிகத் தளங்களிடம் விற்றுவிடுகிறது அந்த நிறுவனம்.

இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை ரத்து செய்துள்ள அந்த நிறுவனம், சென்ற மாதம் மூன்று ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.

சிறிய, நடுத்தர வர்த்தக நிறுனங்களுக்கு உதவும் வகையில், வரிச் சலுகையளிக்கும் நடைமுறையைத் துரிதப்படுத்தப் போவதாக நிதித்துறை அதிகாரிகள் கூறினர்.

திருவிழாக்களையொட்டி, "விழாக் காலக் கடன்" வழங்குமாறும் பொதுத்துறை வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தகம் செழிக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்