Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் 5,300 ஆண்டுப் பழைமையான நகர் அடுத்த UNESCO உலக மரபுடைமைத் தலமாகிறது

UNESCO உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெறவுள்ளது 5,300 ஆண்டுப் பழமைவாய்ந்த சீன நகர்.

வாசிப்புநேரம் -
சீனாவின் 5,300 ஆண்டுப் பழைமையான நகர் அடுத்த UNESCO உலக மரபுடைமைத் தலமாகிறது

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

UNESCO உலக மரபுடைமைத் தலங்கள் பட்டியலில் இடம்பெறவுள்ளது 5,300 ஆண்டுப் பழமைவாய்ந்த சீன நகர்.

சீனாவில் உள்ள 55ஆம் மரபுடைமைத் தலமாகிறது லியாங்சூ (Liangzhu) தொல்பொருள் தலம்.

இதனால், ஆக அதிகமான மரபுடைமைத் தலங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருந்த இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது சீனா.

சீனாவில் மனித நாகரிகம் தோன்றியதற்கான ஆகப் பழமைவாய்ந்த ஆதாரமாக லியாங்சூ தொல்பொருள் தலம் விளங்குகிறது.

சசியாங் (Zhejiang) வட்டாரத்தில் உள்ள அது சுமார் 5,300 ஆண்டுகள் பழமையானது.

முதன்முதலில் 1936ஆம் ஆண்டு அந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

உடைந்த பானை ஓடுகளைப் பார்த்து, அந்த இடத்தில் தொல்பொருள் ஆய்வு தொடங்கப்பட்டது.

சுமார் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்த இடத்தில், 11 அணைகள், கல்லறைத் தோட்டங்கள், தண்ணீர்ச் சேமிப்புக் கட்டமைப்பு, சுவர்கள்-ஆகியவை இருந்ததற்கான தடயங்கள் ஆய்வில் தெரியவந்தது.

சுமார் 4,000 பேர் 10 ஆண்டுகள் உழைத்ததன் பலனாக அந்த இடம் உருவெடுத்ததாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அது UNESCO மரபுடைமைப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று 20ஆண்டுகளுக்கு மேல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது சுற்றுப்பயணிகள் அந்த இடத்திற்குச் செல்லலாம்.
ஆனால் ஒவ்வொரு நாளும் 3,000 பேர் மட்டுமே அங்கு செல்லமுடியும். அதற்கு முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்