Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்க-சீன நிலையற்ற உறவுக்கு இடையே பெய்ச்சிங்கில் திறக்கப்படும் Universal Studios

அமெரிக்க-சீன நிலையற்ற உறவுக்கு இடையே, சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் (Beijing) Universal Studios கேளிக்கைப் பூங்கா திறக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
அமெரிக்க-சீன நிலையற்ற உறவுக்கு இடையே பெய்ச்சிங்கில் திறக்கப்படும் Universal Studios

(படம்: Reuters/Tingshu Wang)

அமெரிக்க-சீன நிலையற்ற உறவுக்கு இடையே, சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் (Beijing) Universal Studios கேளிக்கைப் பூங்கா திறக்கப்படுகிறது.

சுமார் 20-ஆண்டுக் காத்திருப்புக்குப் பின் திறக்கப்படும் பூங்கா மீது மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டிவந்தனர்.

அமெரிக்காவைச் சார்ந்த Universal Studios கேளிக்கைப் பூங்காவின் 5-ஆவது தலம் அது.

அதுவே உலகின் ஆகப் பெரிய Universal Studios கேளிக்கைப் பூங்கா என்றும் கூறப்பட்டுள்ளது.

பெய்ச்சிங்கில் (Beijing) திறக்கப்படும் முதல் அனைத்துலகக் கேளிக்கைப் பூங்காவும் அதுவே.

கேளிக்கைப் பூங்காவிற்கான முதல் 10,000 நுழைவுச்சீட்டுகள், 3 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

"வெகு காலத்திற்குப் பிறகு அமெரிக்கா தொடர்புடைய நிகழ்வு, சீனாவில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது," என்று Global Times நாளேடு குறிப்பிட்டது.

அமெரிக்காவுக்கான சீனாவின் புதிய தூதர் சின் காங் (Qin Gang), இருநாட்டு உறவைக் கேளிக்கைப் பூங்காவின் Roller Coaster சவாரியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

'சவாரியில் பல முறை பதற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் அது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது' என்று அவர் சொன்னார்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்