Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கம்போடியாவுக்குத் திரும்பிச்செல்லும் கடவுள்கள்

கம்போடியாவுக்குத் திரும்பிச்செல்லும் கடவுள்கள்

வாசிப்புநேரம் -
கம்போடியாவுக்குத் திரும்பிச்செல்லும் கடவுள்கள்

படம்: REUTERS

அமெரிக்கா, பல்லாண்டுகளுக்குமுன் கடத்தப்பட்ட 27 பழமைவாய்ந்த சிலைகளைக் கம்போடியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது.

நியூயார்க்கிலுள்ள புலனாய்வாளர்கள், கடத்தப்பட்ட அந்தச் சிலைகளைச் சில ஆண்டு காலமாக முயன்று மீட்டதாகக் கூறப்படுகிறது.

அவற்றின் மொத்த மதிப்பு, சுமார் 3.8 மில்லியன் டாலர்.

இந்துக் கடவுளர்களின் சிலைகளும் அங்கோர் காலத்து பௌத்த சமயத்தோடு தொடர்புடைய சிலைகளும் அவற்றில் அடங்கும்.

சிலைகளைக் கம்போடியாவிடம் திரும்பக் கொடுப்பதன் மூலம், அங்கோர் (Angkor) காலக்கட்டத்திற்கும் நவீன காலத்துக்கும் இடையிலான முக்கிய இணைப்பு மீட்கப்படும் என நம்பப்படுகிறது.

மன்ஹாட்டனின் அரும்பொருள் கடத்தல் ஒழிப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் மூலம் மீட்கப்பட்ட சுமார் 400 அரும்பொருள்களை, அமெரிக்கா, 10 நாடுகளுக்குத் திரும்பத் தந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்