Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்கு அமெரிக்கத் துருப்புகள் தொடர்ந்து செயல்படும்

அமெரிக்கத் துருப்புகள், கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்குத்  தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்கு அமெரிக்கத் துருப்புகள் தொடர்ந்து செயல்படும்

படம்: AFP/Jung Yeon-je

அமெரிக்கத் துருப்புகள், கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்குத்  தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் தென்கொரிய அதிகாரிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு காலாவதியாகும்.

அதிகப் பணம் வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ள வேளையில் பழைய ஒப்பந்தம் காலாவதியாகியிருக்கிறது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்திற்குத் தென்கொரிய நாடாளுமன்றம்   ஒப்புதல் வழங்கவேண்டும்.

தென்கொரியாவில் அமெரிக்கத் துருப்புகள் இயங்குவதற்குப் புதிய ஏற்பாட்டின்படி, தென்கொரியா 924 மில்லியன் டாலர் வழங்கவேண்டும்.

முன்பு அந்தத் தொகை 850 மில்லியன் டாலராக இருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்