Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இஸ்லாமாபாத்தில் அமையவிருந்த முதல் இந்துக் கோயிலின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமையவிருந்த முதல் இந்துக் கோயில் வளாகத்தின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இஸ்லாமாபாத்தில் அமையவிருந்த முதல் இந்துக் கோயிலின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது

(கோப்புப் படம்: AFP)

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமையவிருந்த முதல் இந்துக் கோயில் வளாகத்தின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க நிதியுதவியுடன் கட்டுமானப் பணி தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை.

சட்டம் தொடர்பான காரணங்களால் அது நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கோயிலுக்கான விரிவான கட்டுமானத் திட்டமும் வடிவமைப்பும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தலைநகர் மேம்பாட்டு ஆணையம் கூறியது.

இந்நிலையில், கட்டுமானப் பணியைத் தொடர்வது பற்றிய இறுதி முடிவு, இஸ்லாமியச் சித்தாந்த மன்றம் அதன் பரிந்துரைகளை அறிவித்த பிறகு எடுக்கப்படும்.

பொது நிதியைக் கோயில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்துவது குறித்தும் மன்றம் அதன் பரிந்துரையை வெளியிடும்.

இஸ்லாமாபாத்தில் ஒரு கோயில் இருப்பது தங்களின் அடிப்படைச் சமய உரிமை என்று இந்துக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயிலின் கட்டுமானத்தை ஆதரித்துத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசாங்கம் சில தரப்புகளின் நெருக்குதலுக்கு அடிபணியக்கூடாது என்று அவர்கள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்