Images
  • vaccine covid
    (கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரத் தடுப்பு மருந்தே ஒரே தீர்வு: இந்தியா

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தடுப்பு மருந்தே ஒரே தீர்வு என்று அந்நாட்டு் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சமூகத்தில் பெரிய அளவிலான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவது எளிதல்ல என்று அது கூறியது.

அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இந்தியாவில் கிருமிப்பரவல் மோசமடைந்து வருவது ஆச்சரியத்துக்குரியது அல்ல என்று அரசாங்கம் தெரிவித்தது.

அங்குள்ள கிராமப் பகுதிகளில் கிருமிப்பரவல் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 55,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.6 மில்லியனைத் தாண்டியுள்ளது. 

Top