Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு சூறாவளி திசை மாற்றம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு சூறாவளி திசை மாறியுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு சூறாவளி திசை மாற்றம்

(படம்: REUTERS)

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைத் தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட வாயு சூறாவளி திசை மாறியுள்ளது.

அது கடலை நோக்கிச் செல்வதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.

இருந்தபோதும், குஜராத்தில் பலத்த காற்றுடன் கனத்த மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், மணிக்கு 160 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளி, மேற்குப் பகுதியை நோக்கிச் செல்வதாகவும் அதே திசையில் தொடர்வதற்கு அதிக சாத்தியம் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.

5 மீட்டர் உயரத்துக்கு மேல் அலைகள் எழும் என அதிகாரிகள் முன்னுரைத்தனர்.

கரையோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 200,000 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.

மீனவர்கள், கடலுக்குச் செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்தச் சூறாவளி குறித்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அக்கறை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்குத் தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்படும் என அவர் twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்