Images
  • t-shirt
    படம்: Twitter/TrendingWeibo

சீனாவிற்கு சினமூட்டிய டி-சட்டை வாசகம்-Versace மன்னிப்பு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆடம்பரப் பொருள்களை விற்கும் இத்தாலியின் Versace  நிறுவனத்தின் டி-சட்டை சீனாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து நிறுவனம் மன்னிப்புக் கோரியிருக்கிறது.

நிறுவனம் வெளியிட்ட டி-சட்டை ஒன்றில் நாடுகளும் அதன் தலைநகரங்களும் இடம்பெற்றிருந்தன.

அதில் ஹாங்காங்கும், மக்காவும் தனி நாடுகளைப் போல் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

அதற்கு சீனாவில் இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதனையடுத்து நிறுவனத்தின் கலை இயக்குநர் டோனடெல்லா வெர்சாஷே (Donatella Versace) மன்னிப்புக் கோரியுள்ளார்.

அது தவறான செயல் என்று கூறிய அவர், நிறுவனம் அந்த டி-சட்டைகளின் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், எஞ்சிய டி-சட்டைகளை முற்றிலும் அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து பின் சீனாவின் அங்கமான நகரங்கள் ஹாங்காங்கும் மக்காவும். ஆனால் அவை தன்னாட்சி அதிகாரம் பெற்றவை.

அவை வெளிநாட்டு நிறுவனங்களால் எப்படி வருணிக்கப்படுகின்றன என்பதைச் சென்ற ஆண்டு முதல் சீனா உன்னிப்பாக கவனித்துவருகிறது.


Top