Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குடியிருப்பு வட்டாரத்தைத் தனிமைப்படுத்தும் வியட்நாம்

வியட்நாமின் சுன் லூய் (Son Loi) வட்டாரத்தைத் தனிமைப்படுத்தப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
குடியிருப்பு வட்டாரத்தைத் தனிமைப்படுத்தும் வியட்நாம்

(படம்: AFP/Nhac NGUYEN)

வியட்நாமின் சுன் லூய் (Son Loi) வட்டாரத்தைத் தனிமைப்படுத்தப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகத் தலைநகர் ஹனோய்க்குச் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த வட்டாரம் தனிமைப்படுத்தப்படும்.

வியட்நாமில் தற்போது 15 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், சுன் லூய் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 3 மாதக் குழந்தையும் அடங்கும்.

COVID-19 கிருமிப் பரவல் காரணமாக வியட்நாமின் பொருளியல், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவாக, ஏற்கெனவே இவ்வாண்டுக்காக முன்னுரைக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான 6.8 விழுக்காட்டை எட்ட முடியாமல் போகக்கூடும் என்று வியட்நாம் கூறியுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்