Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூருக்கு வருகை புரியும் வியட்நாமியப் பிரதமர்

பிரதமர் லீ சியென் லூங்கின் அழைப்பை ஏற்று வியட்நாமியப் பிரதமர் நுயென் சுவன் ஃபுக் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங்கின் அழைப்பை ஏற்று வியட்நாமியப் பிரதமர் நுயென் சுவன் ஃபுக் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

நாளை தொடங்கி அவரது பயணம் ஏப்ரல் 27ஆம் தேதி வரை நீடிக்கும்.

சிங்கப்பூர், வியட்நாம் ஆகியவற்றுக்கு இடையிலான அரசதந்திர உறவின் 45ஆம் ஆண்டு நிறைவு இந்த வருடம் கொண்டாடப்படும் நிலையில், வியட்நாமியப் பிரதமரின் பயணம் இடம்பெறுவதை, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டியது.

திரு. நுயென், சிங்கப்பூரிலிருக்கும்போது அதிபர் ஹலிமா யாக்கோபைச் சந்தித்துப் பேசுவார்.

பிரதமர் லீ அவருக்குச் சடங்குபூர்வ வரவேற்பளிப்பதோடு அவரை கௌரவிக்கும் வகையில் இரவு விருந்தளித்துச் சிறப்பிப்பார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்