Images
  • vietnam covid
    (படம்: AFP / Manan VATSYAYANA)

தடுப்பூசித் திட்டத்துக்குப் பொதுமக்களிடம் நன்கொடை கேட்கும் வியட்நாம்

வியட்நாம், தனது தடுப்பூசித் திட்டத்துக்காகப் பொதுமக்களிடமிருந்து நன்கொடை கோரியுள்ளது.

புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அந்நாடு போராடிவரும் நிலையில் அதன் கோரிக்கை வந்துள்ளது.

COVID-19 தடுப்பூசி நிதிக்கு நன்கொடையளிக்கும்படிக் கேட்கும் குறுஞ்செய்திகளைக் குடியிருப்பாளர்கள் கடந்த வாரத்திலிருந்து பெற்றுவருகின்றனர்.

இதுவரை சுமார் 181 மில்லியன் வெள்ளி நன்கொடை பெறப்பட்டுள்ளது.

ஆனால் அந்தப் பணம் எப்படிச் செலவிடப்படும் என்பது குறித்துச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வியட்நாமில் இதுவரை 9,000 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 மில்லியன் பேர் உள்ள நாட்டில் சுமார் 1 விழுக்காட்டினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

Top