Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: வியட்நாமின் டானாங் நகரில் மேலும் இருவர் கிருமித்தொற்றால் மாண்டனர்

COVID-19: வியட்நாமின் டானாங் நகரில் மேலும் இருவர் கிருமித்தொற்றால் மாண்டனர்

வாசிப்புநேரம் -

வியட்நாமில் கொரோனா நோய்ப் பரவலுக்கு மேலும் இரண்டு பேர் பலியானதை அடுத்து மாண்டோர் எண்ணிக்கை 13க்கு உயர்ந்துள்ளது.

மாண்டோரில் ஒருவருக்கு 33 வயது.

வியட்நாமில், கிருமித்தொற்றுக்கு இதுவரை பலியானவர்களில் அவரே ஆக இளையவர்.

மாண்ட இருவருக்கும் ஏற்கெனவே வேறு சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் மத்திய நகரான டானாங் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், விளையாட்டு அரங்கம் ஒன்றில் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை வியட்நாமிய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

அது, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் உள்ளது.

டானாங் நகரில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படுவர்.

வியட்நாமில் குறைந்தது 15 வட்டாரங்களுக்குப் பரவியுள்ள கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

வியட்நாமில் இதுவரை 840 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்