Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமின் மத்தியப் பகுதியில் வெள்ளம் - ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

வியட்நாமின் மத்தியப் பகுதியில் வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வியட்நாமின் மத்தியப் பகுதியில் வெள்ளம் - ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

(படம்: VTV/Reuters)

வியட்நாமின் மத்தியப் பகுதியில் வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இடைவிடாமல் பெய்யும் அடைமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் மாண்டார்.

இவ்வாரத்தில் மேலும் கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவாங் நம் (Quang Nam) வட்டாரத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அந்த வட்டாரத்தில் இவ்வார இறுதியில் மட்டும் சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தென்சீனக் கடலில் வெப்பமண்டலத் தாழ்வான அழுத்தம் உள்ளதால் வியட்நாமின் தென், மத்தியப் பகுதியில் கனத்த மழை பெய்வதாக அந்நாட்டு வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

வியட்நாம் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளதால் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அங்கு அடிக்கடி நேர்கின்றன.

-Reuters/ga

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்